Thursday, February 28, 2008

A COLOSSUS by the name of SUJATHA!

மீள் பதிவு (posted on 3 MAY 2005)
********************************
இந்த வார விகடனில், சுஜாதா அவர்களின் "கற்றதும் பெற்றதும்" மிக மிக உணர்வு பூர்வமாக எழுதப்பட்ட ஒன்று. வயதானால் ஏற்படும் உடல்/மன/குண மாற்றங்களை தனது அசத்தலான பாணியில் நகைச்சுவையாக எழுதியிருக்கிறார். அவர் உடலுக்கு தான் வயதே ஒழிய மனம் இன்னும் இளமையாக இருப்பதாகவே தோன்றுகிறது.


அதற்கு உதாரணம், அவரைப் போன்ற இன்னொரு தாத்தாவின் வயதை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் சாகசம் :-) (பார்க்க, தேசிகனின் ஹாப்பி பர்த்டே சுஜாதா
!
)


//எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
//


யதார்த்தத்தை எவ்வளவு நெகிழ்ச்சியாக வெளிப்படுத்தியிருக்கிறார்! எனக்கென்னவோ, அவர் பல ஆண்டுகளாக, அயற்சியில்லாமல் தனது உடலையும், மூளையையும் வருத்திக் கொண்டதன் விளைவாகவே (அதனால் பலருக்கு அவரது எழுத்துக்கள் வாயிலாக மிகுந்த சந்தோஷம் கிடைத்தது என்றாலும்) தற்போது பலவித உடல் நலக்குறைவுகளால் கஷ்டப்படுகிறார் என்று தோன்றுகிறது. அவர் இன்னும் பல ஆண்டுகள் நலமுடன் இருக்க பிரார்த்திக்கிறேன்.


//கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது.
//

NOSTALGIA போன்ற ஒரு சுகமான உணர்வு உலகத்தில் கிடையாது என்று பறைசாற்றுபவை அவரது ஸ்ரீரங்கத்துக் கதைகள்.

ஸ்ரீரங்கத்து கதைகளை (முழுத்தொகுப்பாக) மறுபடியும் படித்தபோது ழரு பிரமிப்பு லற்பட்டது! ஒவ்வொரு கதையும் ஒரு நல்முத்து! அவற்றை படிக்கையில், திரு.R.K.நாராயணன் அவர்களின் "Malgudi Days" ஏற்படுத்திய அதே அளவு தாக்கத்தையும், ஒரு வித சுகமான "Nostalgic" உணர்வுகளையும் அனுபவிக்க முடிந்தது. அந்தக்காலத்து மிக அழகான ஸ்ரீரங்கத்தையும், மக்களையும், பெருமாளையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவற்றை படித்து முடிக்கும் வரை, அவரது தேர்ந்த, unique "கதை சொல்லும் பாணி" என்ற கயிற்றினால் நம்மை கட்டிப்போட்டு விடுகிறார்!!

குறிப்பாக, "அரசு பகுத்தறிவுப் பாசறை" ஓரு "Real Classic"! Jeffrey Archer-இன் பாணியை திரு.சுஜாதா மிக அருமையாக தமிழில் கையாண்டிருக்கிறார். எவரும் எதிர்பார்க்காத ஓரு முடிவு தான் அக்கதையின் சிறப்பு! அடுத்ததாக, "மாஞ்சு" என்ற கதை, உள்ளத்தை உருக்கி விடுகிறது. "மறு" என்ற கதையில் வரும் நிகழ்ச்சிகளை உண்மையில் நடந்ததாகத் தான் நினைக்கத் தோன்றுகிறது!!


//சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
//

எங்கேயோ படித்திருக்கிறேன். ஒரு பெரிய தத்துவ மேதை (நாத்திகர்) இறக்கும் தருவாயில், தனது சீடர்களை அழைத்து, "நான் இத்தனை நாள் கடவுள் இல்லை என்று சொல்லி வந்ததை மட்டும் கொள்ளாமல், நீங்கள் உங்கள் வழியில் அது உண்மையா என்று ஆராய வேண்டும்" என்றாராம். சுஜாதா சொல்லும் குழப்பங்கள் பலருக்கும் உள்ளன.


// நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).
//

எவ்வளவு எளிமையாகக் கூறி விட்டார்!


//இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.
//


அவர் கூறிய இந்த TOP TEN-இல் குறைந்தது 9 விடயங்கள் பொதுவாக எல்லா வயதினருக்கும் பொருந்தக் கூடியவையே!!! இளவயதினருக்கு பத்தாவது விஷயமாக 'பணத்தை'க் கூறலாம்!


//என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!
//

இதை வாசிக்கும்போது, அவரது சிறந்த கதைகளில் ஒன்றாக நான் கருதும் "பிரிவோம் சந்திப்போம்" பகுதி இரண்டின் கடைசி பத்தி (நியூயார்க் நகரை அற்புதமாக வர்ணித்து விட்டு, ஆனால் மதுமிதா தான் இல்லை என்று நாயகன் நினைப்பதாக முடித்திருப்பார்!) ஏற்படுத்திய அதே தாக்கம் உண்டானது!!!! அந்த தாக்கத்தின் (பல ஆண்டுகளுக்கு பின்னர்!) வெளிப்பாடு தான், என் மகளுக்கு "மதுமிதா" என்று பெயர் சூட்டியது!!!


அவரே ஒரு கட்டுரையில் எழுதியது போல 'இன்னுமொரு நூற்றாண்டிரும்' என்று அவரை வாழ்த்தி வணங்குகிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா


நன்றி: ஆனந்த விகடன்

13 மறுமொழிகள்:

said...

Dear Bala

It was really a moving article. I had the very same feeling as you had on reading his. Although he mentioned lightly, it touches so many deep issues. Let him be free from all his illness and live healthily for another 100 years.



Regards
Sa.Thirumalai

Desikan said...

பாலா,
அருமையாக எழுதியிருக்கிறீர்கள். பிரிவோம் சந்திப்போம் மிக நல்ல கதை.
என்னுடைய ஓவியத்துடன் ஸ்ரீரங்கத்து கதைகள் வந்தது என்னுடைய நோபெல்!
தேசிகன்

said...

Thanks, Desikan and Thirumalai! It may take a long time for a writer of Sujatha's CALIBRE to emerge! He is really a GIFT given to us by Lord Arangan!!!

Thirumalai,
You have returned to visit my blog after quite sometime to leave a comment :))

enRenRum anbudan
BALA

அன்பு said...

அருமையா எழுதியிருக்கீங்க... பாராட்டுக்கள் பாலா.
(பாருங்களேன்.... சுஜாதா சார் பத்தி எழுதுறவங்களும் கலக்கிடுறாங்க:)

என் மகளுக்கு "மதுமிதா" என்று பெயர் சூட்டியது!!!
துளசியக்கா மகள் பெயரும் அதே... ஆனால் அதுதான் காரணமென்று பின்னூட்டத்தில் அவங்க சொல்லித்தான் தெரியும்.

said...

அன்பு,

பின்னூட்டத்திற்கு நன்றி. பல நாட்களுக்கு பின் என் வலைப்பதிவுக்கு மறுவருகை செய்துள்ளீர்கள் போலுள்ளது :))

நான் முன்னமே சொன்னது போல், உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கம் தான் எழுத வேண்டும் என்ற தூண்டுதலுக்கு ஒரு முக்கியக் காரணம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

மாயவரத்தான் said...

நாங்கல்லாம் ஊக்கம் கொடுத்தா மீண்டும் மீண்டும் எழுத மாட்டீங்களா பாலா?! ;)

enRenRum-anbudan.BALA said...

Rest in Peace, Sujatha Sir !

பிரேம்ஜி said...

May His Soul Rest in Peace

ஓகை said...

பொருத்தமான ஒரு மீள்பதிவு. நல்ல அஞ்சலி.

enRenRum-anbudan.BALA said...

Premji, Ogai ayya,

pakirthalukku nanRi !

அன்பு said...

சுஜாதாவின் மறைவு இப்போது ஏற்படுத்தியிருக்கும் அதிர்வைக்காட்டிலும் பன்மடங்கு என் மனதில் அதிர்வேற்படுத்தியது, இந்தக்குறிப்பிட்ட வாரக்கட்டுரை. அதை மீண்டும் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

செய்தி கேள்விப்பட்டவுடன் தேசிகன் பதிவுக்கு சென்று பின்னூட்டமிட முயற்சித்து, அலுவலகத்திலிருந்து முடியாமல் - மனதினுள்ளே அவருக்கு ஆறுதலுடன் வெளிவந்தேன். உங்கள் மின்னஞ்சல் பார்த்து மீண்டும்...
இன்று காலை அண்ணாக்கண்ணன், பதிவில் சாரைப் பார்த்தபோது- வெகுநேரம் அதிர்ச்சியுடன், அவருடைய எழுத்துக்களின் தாக்கத்தை மனதுள் அசைபோட்டேன்...

ஈடுசெய்ய இயலாத இழப்பு.

Madan said...

Bala,
My daughter's name is MADHUMITA. You can guess the rest...

I visit New York City every week due to my work and every time I recall his comments.

Anbudan,
Madan

enRenRum-anbudan.BALA said...

Dear Madan,
Thanks for your comments. When you have the time write to
balaji_ammu@yahoo.com

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails